பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியை கூகுளில் கோடிக்கணக்கான மக்கள் தேடியதால், கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இணையத்தில் ட்ராஃபிக் ஏற்பட்டதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய ஃபிஃபா இறுதிப்போட்டியை கூகுளில்
கோடிக்கணக்கான மக்கள் தேடியதாக கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்
பிச்சை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி குறித்த தேடல்,
கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவு ட்ராஃபிக்கை
இணையத்தில் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது ஒட்டுமொத்த உலகமும் ஒரு விஷயத்தைப் பற்றி தேடுவது போல இருந்ததாக சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.