ட்விட்டரில் இருந்து விலகுவாரா எலான் மஸ்க்?

Date:

எலோன் மஸ்க் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்ற ட்விட்டர் கருத்துக்கணிப்புக்கு ட்விட்டர் பயனர்கள் பதிலளித்துள்ளனர்.

நேற்றைய வாக்கெடுப்பில் 57.5 பயனர்கள் அவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 10 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர்  பயனர்கள் காணப்படுகின்றனர். 42.5% மக்கள் அவர் அந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அதன்  செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே அதிகப்படியான ஊழியர் நீக்கம், ட்விட்டர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கட்டண விதிமுறைகள் போன்றவைகளால், எலான்
மஸ்க் உலகம் முழுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த நிலையில்  தலைமை நிர்வாக அலுவலராக நான் தொடரலாமா என எலான்  ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார்.

அதிலும் ட்விட்டரில் புளூ டிக் வைத்திருப்பவர்களால் மட்டுமே இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்க முடியும் எனவும் அறிவித்தார்.

இந்த கருத்துக்கணிப்பு உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட நிலையில், வாக்கெடுப்பு முடிவுகள் மஸ்க்குக்கு எதிராக திரும்பியுள்ளன.

ஏனென்றால் 57.5 சதவீதம் பேர், எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, பயனர்களின் கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...