‘யார் அந்த முட்டாள்?’: தனது பதவி குறித்து எலான் மஸ்க் ட்வீட்

Date:

ட்விட்டர் தலைமை அதிகாரி பதவி இராஜினாமா தொடர்பாக எலான் மஸ்க் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலரும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை  அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த டிச.18 ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார்.

அதில், தான் ட்விட்டர் தலைமை அதிகாரி பதவியில் நீடிக்கலாமா என்பது குறித்த கேள்விக்கு புளூடிக் ட்விட்டர் பயனர்கள் மட்டும் வாக்களிக்குமாறு
கூறினார்.

இந்த வாக்கெடுப்பில் 57.5 சதவீதம் பேர், எலான் மஸ்க் ட்விட்டர்   பதவியில்
இருந்து விலக வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று (டிச.21) எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“ட்விட்டர் தலைமை அதிகாரி பதவியை வகிப்பதற்கு தகுதி வாய்ந்த முட்டாள்தனம் உள்ள ஒருவர் கிடைத்துவிட்டால், நான்  பதவியை இராஜினாமா செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட...