10 மணி நேரம் மின்வெட்டு இருக்காது: எரிசக்தி அமைச்சர்

Date:

நிலக்கரி இல்லாமல் அடுத்த வருடம் 10 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (டிச.21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட மின் பொறியியலாளர் சங்கத்திற்கு எதிராக சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி போதுமானதாக இல்லை என்றால் அதற்கான மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி ஆலையில் உள்ள நிலக்கரி ஆலை டிசம்பர் 31ஆம் திகதி முற்றாக மூடப்படவுள்ளது.

இதனால் அடுத்த வருடம் சுமார் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கண்டிப்பாக கட்டண திருத்தம் செய்யப்படும்.

கட்டண திருத்தத்திற்கு தேவையான சட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்ட அதிகாரத்திற்கான உறுதியை அட்டர்னி ஜெனரல் வழங்கியுள்ளார்.”என கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...