வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே விடுதலை செய்யுமாறு இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அவரை புஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம் என்றும் கோரி பொரளையில் உள்ள சிறைச்சாலை தலைமையகத்திற்கு முன்பாக ‘அறகலயே’ போராட்ட செயற்பாட்டாளர்கள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.