ஐஸ் போதைப்பொருள் பாவனையைத் தடுக்க கம்பஹா மாவட்டத்தில் விசேட கண்காணிப்பு குழுக்கள்!

Date:

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்காக கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கண்காணிப்புக் குழுக்களை நடைமுறைப்படுத்துவது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுக்கள் ஸ்தாபிக்கப்படாத பாடசாலைகளில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் குழுக்களை அமைக்குமாறு கம்பஹா கல்வி அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில், கம்பஹா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு அமைச்சர் கம்பஹா பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் கம்பஹா பாடசாலைகளில் போதைப்பொருள் தடுப்பு மேற்பார்வைக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதா என  வினவப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கம்பஹா கோட்டக் கல்விப் பணிப்பாளர், கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பாடசாலைகள் தொடர்பில் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது ஒரு மோசடியாகவே செயற்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த மோசடியை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...