நடிப்பை துறந்து புனித பயணம் – மக்காவில் இருந்து கண்ணீர் விட்டு பிரார்த்தனை!

Date:

இந்தியாவின் தமிழ்நாட்டின் பிரபல நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித பூமியான மக்கா மற்றும் மதீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வீடியோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை மும்தாஜ் இஸ்லாமியர்களின் புனித பூமியான மக்கா மற்றும் மதீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வீடியோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞராக திகழும் இயக்குநர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மோனிஷா என் மோனாலிசா’. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மும்தாஜ்.

அதன்பின்னர் மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மநாபன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துத் வந்தார். இளசுகளை ஒரு வழி செய்து விடுவார்.

இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வப்போது தன்னுடைய குடும்பம், பயணங்கள், புதிய போட்டோ ஷூட் போன்ற பல புகைப்படங்களையும் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மக்காவில் இருந்து நடிகை மும்தாஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு வந்துள்ளதை தான்பாக்கியமாக கருதுவதாகவும், தன்னுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றும், தான் மக்கள் அனைவருக்காகவும் பிராத்தனை செய்வதாகவும், நாங்கள் செய்யும் பாவங்களை மன்னித்துத் இன்பத்தை தாருங்கள் என்றும் கண்ணீர் மல்க பிராத்தனை செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CmZVLzwKklp/

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...