வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு!

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, அக்குரணை, துனுவில பிரதேசத்தில்  வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 16 வயது சிறுவனும் 18 வயதுடைய சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி முக்கால்வாய் பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.

ஆபத்தான சூழ்நிலையை கருத்திற் கொண்டு பொலிஸார் பல வாகனங்களை வழிமறித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லையில் இருந்து கம்பளை, நாவலப்பிட்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு குறுகிய பாதையாக ஹெம்மாதகம, கம்பளை வீதி பயன்படுத்தப்படுகிறது.

கண்டி பிரதேசத்தில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் கண்டி புகையிரத நிலையம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்துடன் கண்டி மற்றும் மஹையாவ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

கெலிஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையும் நீரில் மூழ்கியுள்ளது.

இந்த மோசமான காலநிலை காரணமாக பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை காலை 10:15க்கு இயக்கப்படவிருந்த புகையிரதமும், மதியம் 12:40 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து நானுஓயா வரையான புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...