2023 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
கொழும்பு 07, கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் தொழில்முயற்சியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில், விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான அதிகபட்ச வசதிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு கணிசமான தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் எள், பச்சை பீன்ஸ் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற தானியங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் 12,500 கிலோகிராம் வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.