வரி அதிகரிப்பு: மாணவர்களின் கல்வி மீது பெரும் தாக்கம்!

Date:

அரசாங்கத்தின் அதிகரித்த புதிய வரிகள் புதுவருடத்தில் மாணவர்களின் கல்வி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் எதிர்கொள்ளவுள்ள அதிகரித்த வரியினால் மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்படும் என மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள சமன்மாலி குணசிங்க பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் தாய்மார்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர். மின்சார, நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளதை நாங்கள் கண்டிக்கின்றோம், ஏற்கனவே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அவர் அச்சுறுத்துகின்றார் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த உரிமைகளிற்கான மகளிர் அமைப்பின் சமன்மாலி குணசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தற்போது எங்கள் பிள்ளைகளின் கல்வியை அழிவுப்பாதையில் கொண்டுசெல்கின்றனர், நாட்டை அழித்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் நடைபெறும்போது கல்வியமைச்சரை காணமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மாணவர்களின் தேவைகளை புறக்கணித்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்காக பணத்தை செலவிடுகின்றது பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவில்லை. 200 பக்க சிஆர் கொப்பி நான்கு மாதங்களிற்கு முன்னர் 230 ரூபாயாக காணப்பட்டது தற்போது 510 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களை ஆசிரியர்கள் தரமான சிஆர் கொப்பிகளை வாங்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். ஆனால் பெற்றோர்களால் சாதாரண சிஆர் கொப்பியை கூட வாங்க முடியாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...