இலங்கையில் இடம்பெறும் ATM திருட்டு: கோடிக்கணக்கான ரூபா கொள்ளை!

Date:

தென் மாகாணத்தின் மூன்று பிரதான நகரங்களில் அமைந்துள்ள மூன்று அரச வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து கோடி கணக்கான ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள ATM இயந்திரங்களில் இருந்தே இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

ATM இயந்திரங்களின் கணினி கட்டமைப்பை ஹேக் செய்து மென்பொருள் மாற்றப்பட்டு, ஒரு ATM இயந்திரத்தில் இருந்து நாற்பத்தாறு லட்சத்து எண்பதாயிரம் ரூபாவும், மற்றொரு இயந்திரத்தில் இருந்து இரண்டு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாவும், மற்றைய இயந்திரத்தில் இருந்து ஐம்பத்தேழு இலட்சம் ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவொன்று, ATM கூடங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராக்களில் ஸ்டிக்கரை ஒட்டி, இந்த கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ, காலி மற்றும் பத்தேகம பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...