கதிர்காமத்திற்குச் சென்று திரும்பும் வழியில் பஸ் விபத்து: 15 பேர் மருத்துவமனையில்

Date:

(file photo)

கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று இன்று (01) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88வது கிலோமீற்றருக்கு அருகில் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.

பேருந்தில் பயணித்த 15 பேர்  விபத்துக்குள்ளானதில் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் ஏனையோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...