பேருந்து கட்டண திருத்தம் குறித்து இன்று தீர்மானம்!

Date:

டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படி, ரூ.420 ஆக இருந்த ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை ரூ.405 ஆகும்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ​​ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த காலப்பகுதியில் டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டண திருத்தத்திற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் விலை குறைப்பு கட்டணத்தை குறைக்க போதுமானதாக இல்லை என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...