2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான நகரம் தக்ஸிலா!

Date:

பாகிஸ்தானில் பல யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் தக்ஸிலாவும் ஒன்றாகும்.

இது இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 31 கிமீ தொலைவிலும், கிராண்ட் ட்ரங்க் சாலையில் இருந்து வடமேற்கில் 36.40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

ஹசனப்தால், கான்பூர் மற்றும் வாஹ் ஆகியவை இதன் அன்மையில் அமைந்துள்ள ஏனைய நகரங்களாகும். வாஹ் காந்த் மற்றும் தக்சிலா இரட்டை நகரங்கள் ஆகும். 1998 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு சனத்தொகை 151,000 ஆகும்.

ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள தெஹ்சில் எனப்படும் ஏழு நிர்வாக துணை மாவட்டங்களில் தக்ஸிலாவும் ஒன்றாகும். இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போடோஹர் பீட பூமியின் எல்லையில் பரவியுள்ளது. தக்ஸிலா வரலாற்று ரீதியாக தக்ஸலா என்றே அழைக்கப்பட்டது.

கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றைக் இந்நகரம் கொண்டிருந்தாலும் தக்சிலாவின் பதிவு செய்யப்பட்ட வரலாறு கிமு 6 ஆம் நூற்றாண்டில் பெர்சியாவின் காந்தார இராச்சியத்தில் அச்செமனிட் பேரரசின் ஒரு பகுதியாக இப்பகுதி மாறியபோதே ஆரம்பமாகியது.

பொதுவாக பஞ்சாபி கலாச்சாரம் இங்கு நிலவினாலும், இங்குள்ளவர்கள் ஆங்கிலம் மற்றும் உருது இரண்டு மொழிகளையும் ஓரளவு பேசுவர்.

இருப்பினும், மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழியானது இப்பகுதிக்கே தனித்துவமான பஞ்சாபி மொழியின் ஒரு துணை மொழியாகும்.

பொதுவாக, இங்கு வாழும் மக்களின் உடைகள், உணவு மற்றும் பானங்கள் பஞ்சாப் மாநிலத்தின் பழக்கவழக்கங்களைப் போலவே இருக்கின்ற பேதிலும் தக்சிலாவை வேறுபடுத்திக் காட்டுவது இதன் ஒப்பற்ற வரலாறேயாகும்.

அவ்வடிப்படையில் தக்ஸிலா அதன் வலுவான வரலாற்று பின்னணியின் தாக்கத்தையே அதிகம் பிரதிபலிக்கின்றது.

பௌத்தர்களிடையே, இந்த இடம் உலகின் முதல் பல்கலைக்கழகத்தின் தாயகமாக அறியப்படுகிறது. பழங்கால நாகரிகத்தின் அற்புதங்களை அனுபவிக்க இன்று ஏராளமானோர் இத்தளத்திற்கு வருகை தருகின்றனர்.

1975 ஆம் ஆண்டில், தக்ஸிலாவை பாதுகாக்கப்பட்ட பழங்காலப் பகுதியாக அறிவிக்கும் சட்டத்தை பாகிஸ்தான் நிறைவேற்றியது.

தக்சிலாவின் வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் அசல் வடிவமைப்புகளைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...