உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நண்பகல் 12.00 மணிக்கு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான பணத்தை நாளை (5) முதல் வைப்பிலிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.