‘வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு கொடுக்க முட்டை இல்லை’

Date:

நாட்டின் மருத்துவமனைகளுக்கு  முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதையடுத்து வைத்தியசாலைகளுக்கு முட்டை வழங்குவதை நிறுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தலைவர் டாக்டர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்தார்.

ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காயப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், சிறப்பு உணவு வகைகளை வழங்க வேண்டிய நோயாளிகள், புரதச் சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் போன்ற நோயாளிகளுக்கு கூட முட்டை  கொடுக்க முடியவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 10,000 முட்டைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 12,000 முட்டைகள் என வைத்தியசாலை அமைப்புக்கு நிறைய முட்டைகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

எனவே அரசு உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது மருத்துவமனைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...