பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்!

Date:

அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேரூந்து கட்டணத்தை குறைக்க தமக்கு அனுமதியில்லை என தனியார் பேரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், பேரூந்து கட்டணத்தை குறைப்பது குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் அதிவேக பேரூந்து கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...