கடந்த திங்கட்கிழமை (9) தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட 650 கஞ்சா செடிகள் மீட்கப்பட்டது.
மொனராகலையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வளர்க்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளுடன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குமார மற்றும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.