உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவித்தலை வழங்கினார்.
இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டு நடத்தப்படும் என தேசியத் தேர்தலுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.