பஹன மீடியா ஏற்பாட்டில் நடைபெறும் மூன்று நாள் மோஜோ பயிற்சி நெறி வெற்றிகரமாக தொடங்கியது!

Date:

புத்தளம் மாவட்ட மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொணர்வதை இலக்காகக் கொண்டு பஹன மீடியா ஏற்பாட்டில் நடைபெறும் மூன்று நாள் மோஜோ பயிற்சி நெறி இன்று ஆரம்பமாகியது.

ஓய்வுநிலை புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸன்ஹீர், சட்டத்தரணி அஷ்ஷெய்க் பஸ்லுர் ரஹ்மான், வளவாளராக மொஹமட் அஸ்வர் ஆகியோரின் பங்கேற்பில் இன்றைய பயிற்சி அமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புத்தளம் ஐசொப்ட் கல்லூரியில் நடைபெறும் இந்தப் பயிற்சி நெறிக்கு புத்தளம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 16 இளம் ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்

பஹன மீடியா பணிப்பாளா் அஷ்ஷெய்க் எம்எஸ் அப்துல் முஜீபின் தலைமையில் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி நெறிக்கு அமேசான் கொலேஜ், டயபர்ஸ் லிமிடெட், அல் ஹிமா இஸ்லாமிய நிறுவனம், ஐசொப்ட் கொலேஜ் ஆகியன அனுசரணை வழங்குகின்றன.

பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு நிவ்ஸ்நவ் ஊடகத்தினோடு இணைந்து தமது படைப்பாக்கங்களை வெளியிடுவதற்கான அவகாசமும் வழங்கப்படும்.

பயிற்சி நெறி இனறும் (14) நாளையும் நடைபெறுவதோடு இறுதி நாளாகிய 21 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வில் புத்தளத்தைச் சேர்ந்த பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

 

Popular

More like this
Related

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...

இமாம் கஸ்ஸாலி அவர்களின் நோன்பு குறித்த தத்துவங்கள்: மிகச் சிறப்பானோரின் நோன்பாக ரமழான் அமையட்டும்!

புனிதமான ரமழான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இது வெறும் பசியோடு இருக்கும்...