ஸ்பா நிலையங்களில் மசாஜ் கடமைகளின் போது ஆண்களுக்கு ஆண்கள் மாத்திரம் ஈடுபடும் வகையிலும், பெண்களுக்கு பெண்கள் மாத்திரம் மசாஜ் செய்யும் வகையிலும் புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
மசாஜ் சென்டர்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலுறவு நோய்கள் பரவுவதால் இந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.
எனவே மசாஜ் மையங்கள் ஆயுர்வேத பிரிவில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர் கட்டாயமாக இருக்க வேண்டும்.
மேலும், மசாஜ் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தொழில் அறிவும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவிக்கிறார்.