13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகக் குறுகிய காலத்தில் நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி (ஜனவரி 16) வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரிவினைவாத ஆதரவு சக்திகளும் இனப்பிரச்சினை எனக் குறிப்பிடும் சமூக அரசியல் நெருக்கடியானது தேசியப் பிரச்சினையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அரசியல் தீர்வுகள் தேவை என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்தார்.
மோதல்கள் முடிவடைந்த பின்னர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்குப் பதிலாக, கொங்கிரீட் பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும்அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான மூலோபாய பிரேரணையை ஜனாதிபதி முன்வைக்க தவறியதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.