திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் போது அவற்றைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுபவர்களே, திருடர்களைப் பாதுகாப்பதாகக் குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேர்தல் செலவீனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட போது, இந்த தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நான் திருடர்களைப் பாதுகாப்பதாகக் கூச்சலிடுகின்றனர். திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டமூலங்கள் கொண்டு வரப்படும் போது அதனைச் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றனர் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.