ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காமல் தியாகம் செய்யுமாறு இலங்கை மக்களை கேட்பது நியாயமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலமே நாட்டு மக்களின் தியாகங்களுக்கு நீதி கிடைக்குமெனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை அழித்தவர்கள் தலைமறைவாக இருக்கும் போது மக்கள் மீது வரிகளை சுமத்துவது எப்படி நியாயமானது என அனுர திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.