உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
ஷாருக்கான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பிரபலமானவர். ‘கிங் கான்’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான் , திரைப்படங்களில் நடிப்பதால் மட்டுமல்ல, நிறைய சம்பாதிப்பதாலும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக ஷாருக்கான் நடிப்பில் பெரிய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், அவர் இப்போது உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜெர்ரி சீன்ஃபீல்ட், டைலர் பெர்ரி மற்றும் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ஆகியோருக்குப் பிறகு உலகின் நான்காவது பணக்கார நடிகராக ஷாருக்கான் உருவெடுத்துள்ளார்.
வேர்ல்ட் ஆஃப் ஸ்டாடிஸ்டிக்ஸ் வெளியிட்ட ‘உலகின் பணக்கார நடிகர்கள்’ பட்டியலின்படி, 770 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 6,306 கோடியுடன் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.
இதில் அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜெர்ரி சீன்ஃபீல்ட் 1 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
அந்தப் பட்டியல் பின்வறுமாறு
1- ஜெர்ரி சீன்ஃபீல்ட்: 1 பில்லியன் டொலர்
2- டைலர் பெர்ரி: 1 பில்லியன் டொலர்
3- டுவைன் ஜான்சன்: 800 மில்லியன் டொலர்
4- ஷாருக்கான்: 770 மில்லியன் டொலர்
5- டாம் குரூஸ்: 620 மில்லியன் டொலர்
6- ஜாக்கி சான்: 520 மில்லியன் டொலர்
7- ஜார்ஜ் குளூனி: 500 மில்லியன் டொலர்
8- ராபர்ட் டி நீரோ: 500 மில்லியன் டொலர்