மின்சாரத்துறை தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த கலந்துரையாடல்களுக்கு அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அழைக்கப்படவில்லை.
ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.