இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியா வழங்கிய ஆதரவிற்கு அலி சப்ரி ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.