முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் நான் செல்வாக்கு செலுத்த போவதில்லை, அது முஸ்லிம் சமூகத்தின் விடயம்.
ஆனால் ஒன்று நான் சொல்லிக் கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலையும் மீளவும் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கு எதிராக சில முஸ்லிம் பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வதை நான் கண்டுள்ளேன்.
அது அவ்வளவு நல்லதல்ல. அதனை அங்கீகரிக்க முடியாது. வயது வந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேறு பிள்ளைகள் ஆர்ப்பாட்டம் செய்வது இருக்கக் கூடாது, இவ்வாறு செய்வதால் முஸ்லிம் சமூகத்தின் மீது ஒரு எதிராக தவறான புரிதல்கள் ஏனைய சமூகத்திற்கு ஏற்படும்.
அதனால் தான் கூறுகின்றேன் நாம் அடித்துக்கொண்டது போதும், இன நல்லுறவுடன் இணையும் காலம் இது. எனவும் தெரிவித்துள்ளார்.