புத்தக வாசிப்பாளர்களுக்கான முக்கிய திருவிழாவாக கருதப்படும் சென்னை புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு!

Date:

சென்னை மக்களாலும், இலக்கியவாதிகளாலும் கொண்டாடப்பட்ட சென்னை புத்தக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள YMCA அரங்கில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.

கடந்த 6-ம் திகதி தொடங்கிய இந்தக் கண்காட்சியில் ஆயிரம் அரங்குகள், லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

தினமும் பல்வேறு பதிப்பகங்களிலும் முன்னணி எழுத்தாளர்கள் அமர்ந்து கையெழுத்திட்ட பிரதிகளை வழங்குவதும், வாசகர்களைச் சந்திப்பதுமாக இலக்கிய மனம் கமழ்ந்தது.

கடந்த ஆண்டில் ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனையாகின.

கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டபின் நடைபெற்ற, நடப்பாண்டின் புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டை காட்டிலும் ஏராளமான வாசகர்கள் குவிந்தனர்.

இதேபோல் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட  தமிழ்நாடு அரசு சார்பிலான சர்வதேச புத்தக கண்காட்சியும் ஜனவரி 16,17 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள்  நடைபெற்றது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தக கண்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக பங்கேற்க முடியாமல் இருந்த புலம்பெயர் எழுத்தாளர்கள், தமிழர்கள் என பலரும் நடப்பாண்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர்.

இந்நிலையில் புத்தகக் கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இந்நிகழ்வில் பதிப்பகத் துறையில் தடம் பதித்தவர்கள், புத்தகக் காட்சி சிறப்புடன் நடக்க துணைபுரிந்தோரும் கவுரவிக்கப்படுகிறார்கள்.

புத்தகக் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதால் இன்று அதிகளவில் கூட்டம் இருக்கும் என்பதால் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழத்திற்கு வரிச்சலுகை

ரமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகையை...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள்!

இஸ்ரேல் நாட்டில் உள்ள வர்த்தக மற்றும் சேவைத் துறைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு...

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

டிசம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்கள் மூலம் இதுவரை பெறாத...

போக்குவரத்து அபராதங்களைச் செலுத்த GovPay முறைமை 7 மாகாணங்களில் அமுல்

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களைச் செலுத்தக்கூடிய GovPay முறைமையானது தற்போது இலங்கையின்...