உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Date:

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (ஜன. 23) தொடங்கியது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 55,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தேர்வு நாடளாவிய ரீதியில் 2,200 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு நிலைய ஒருங்கிணைப்பிற்காக 317 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...