இலங்கைக்கு ஹெலிகாப்டர்களை வழங்க இத்தாலி விருப்பம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
இத்தாலிக்கும், இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், கலாசார பரிமாற்றங்கள், சுற்றுலா மேம்பாடு, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய தலைப்புகள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.