கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேல்மாகாணம் களனி கல்வி வலயத்தில் அமைந்திருக்கின்ற தமிழ் மூல பாடசாலையான அல்முபாரக் கனிஸ்ட வித்தியாலயம் நேற்று வெளியான பரீட்சை பெறுபேறுகளில் பெரும் சாதனையை பெற்றுள்ளது.
இந்த பாடசாலையில் சேர்ந்த 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் இப்பாடசாலைக்கும் ஊருக்கும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர்.
இந்த மாபெரும் சாதனையை ஈட்டுவதற்கும் இம்மாணவர்களுக்கு பூரண ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
இந்த கனிஷ்ட பாடசாலை மென்மேலும் உயர்ந்து நாட்டின் தலைசிறந்த தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு பாடசாலையாக மிளிர நாமும் வாழ்த்துகின்றோம்.