யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

Date:

யாழ். இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

இளைவாலை – பொியவிளான் பகுதியில் வீதியில் வடை விற்பனை செய்யும் வண்டியை இளைஞா்கள் சிலா் தள்ளிச் சென்றுள்ளனா். இதன்போது அதே பகுதியை சோ்ந்த மற்றொரு இளைஞா் குழு துவிச்சக்கர வண்டியில் அவ்வீதியால் வந்துள்ளனா்.

இதன்போது இரு தரப்பிற்குமிடையே உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறியுள்ளது.

சம்பவத்தில் அதே கிராமத்தை சோ்ந்த 29 வயதான புஸ்பராசா நிஷாந்தன்  என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவா் வீட்டிற்கு சென்றதும் இரத்த வாந்தி எடுத்துள்ளாா்.

பின்னா் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிாிழந்துள்ளாா். தலையில் பலமாக தாக்கியதாலேயே அவா் உயிாிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடா்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேகநபா் என பொலிஸாா் கூறியுள்ளனா்.

சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...