இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் ஆகியோர், ஜெய்சங்கரின் சமீபத்திய இருதரப்பு விஜயம் குறித்தும் விவாதித்தனர்.
கடந்த மாதம் ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய அவர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் புனித் அகர்வால் மற்றும் இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலுகா கதுருகமுவ ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.