சிங்கள,முஸ்லிம் இளைஞர்களுக்கு இந்து சமய சடங்குகளையும் கண்டுகளிப்பதற்கும் உரையாடுவதற்கும் வாய்ப்பு!

Date:

நாடளாவிய ரீதியில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நேற்று முன்தினம் (30) ‘தேசிய இளைஞர் தைப் பொங்கல்’ தின விழா கொச்சிக்கடை பொன்னாம்பலானேஸ்வரர் ஆலய வளாகத்தில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வை  விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, நகர இளைஞர் மாவட்ட வாரியம், இளைஞர் சங்க கூட்டமைப்பு மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தலைமையில், இடம்பெற்ற இந்நிகழ்வில்  நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 400 இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு, சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்கள், பொங்கல் சாதம் தயாரித்தல், இந்து சமய சடங்குகளை செய்தல், கோலம் வரைதல் போன்ற அனைத்து இந்து சமய சடங்குகளையும் கண்டுகளிப்பதற்கும் உரையாடுவதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் கலாநிதி திரன் டி சில்வா, பணிப்பாளர் (அபிவிருத்தி) மஞ்சுள விதானாராச்சி, பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் பயிற்சி) ரஷித தெலபொல, பிரதிப் பணிப்பாளர் (ஊடகம்) ஜகத் லியனகே, பிரதிப் பணிப்பாளர் பிரியந்த ஜயரத்ன, மாநாட்டுச் செயலாளர் தரிது நவின் உள்ளிட்ட பணிக்குழுவினர் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...