நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவிகளை வழங்க இலங்கை தயாராகவுள்ளது

Date:

துருக்கி அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த உதவிகளை வழங்கவுள்ளது.

அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துருக்கியில் உள்ள 13 இலங்கையர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 14 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்புடைய ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை 4000 மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, 6,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கம், எல்லையின் இருபுறமும் அழிவையும் குப்பைகளையும் விட்டுச்சென்றதையடுத்து, இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தப்பியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். .

Popular

More like this
Related

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...

ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் மௌபியா அவர்களுக்கு கஹட்டோவிட்டவில் கௌரவிப்பு!

கம்பஹா மற்றும் மினுவாங்கொட கல்வி வலயங்களில் நீண்டகாலமாக ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகராகப்...

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

நாட்டின் பொதுமக்களின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவான சித்திரை புத்தாண்டு காலத்தில்...