காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் ஆற்றில் விழுந்து மரணம்!

Date:

பொலன்னறுவை தம்பல பிரதேசத்தில் கும்புக்கன் வாவியில் தவறி விழுந்து  தந்தையும் மகளும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

தந்தையும் மகளும் செல்ஃபி எடுக்கச் சென்ற போது வாவியில் தவறி விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆற்றில் விழுந்த இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்கள்.

காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது 46) மற்றும் அவரது பிள்ளைகள் அடங்களாக 5 பேர் பொலன்னறுவை மாவட்டம் தம்பல கும்புக்கன் ஆற்றை பார்வையிடச் சென்றுள்ளனர்.

பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சகிதம் கடந்த திங்கட்கிழமை மாலை இவர்கள் காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை மாவட்டத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள்  ஆற்றை பார்வையிடச் சென்று,  ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்க முற்பட்ட போது  ஆசிரியரின் மகள் சயான் பரிசாத் (12 வயது)  ஆற்றினுள் விழுந்துள்ளார்.

தனது மகளை காப்பாற்ற தந்தை ஆற்றினுள் இறங்க ஆறு ஆழமாக இருப்பதனால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து ஆசிரியரின் மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளும் கூக்குரலிட்டு அழ பொது மக்கள் ஒன்று திரண்டு நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் தந்தை ஷாஜகானின் சடலம் முதலிலும், ஒரு மணி நேரத்திற்கு பின்பு மகளின் சடலமும் மீட்கப்பட்டன.

தற்போது இருவரின் சடலங்களும் பொலன்னறுவை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....