உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்காக மாவட்ட பிரதித் தேர்தல்கள் ஆணையாளர்களும், உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.