இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்த பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி!

Date:

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஷா நேற்று 10ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதோடு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவையும் சந்திதார்.

இதன்போது அவர், கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ தலைமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலின்பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டது மேலும் விமானப்படை பணிப்பாளர்களையும் இதன்போது அவர் சந்தித்தார்.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...