துருக்கி – சிரியா நிலநடுக்கம்: மீட்பு பணிகளில் இருந்து இரு நாடுகள் விலகல்!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட  நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் ஜேர்மன் மீட்பு பணியாளர்களும் ஒஸ்திரிய இராணுவமும் நேற்று தேடுதல் நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளன.

இரு நாடுகளும் சில தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 24,617 ஆகவும் சிரியாவில் இறப்பு எண்ணிக்கை 3,500 ஐயும் தாண்டியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும் மீட்பு நடவடிக்கைகளின் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை துருக்கியில் உணவு விநியோகம் குறைவடைந்து வருவதால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது.

அங்கு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை பல துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டத்தை மீறும் எவரையும் தண்டிப்பதற்காக அவசரகால விதிகளை பயன்படுத்துவதற்கு தாம் தயாராக உள்ளதாக துருக்கியின் ஜனாதிபதி ரசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...