துருக்கி-சிரியா எல்லையில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளன.
துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்த நெகிழ்ச்சிக்குரிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அப்படித்தான் நிலநடுக்கத்தின் மையமான காசியன்டெப் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் 94 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
காசியன்டெப் பிராந்தியத்தின் ஷெஹித்காமில் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் அத்நன் முகமது கொர்குத் வசித்த அடுக்குமாடி குடியிருப்பு நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்துள்ளது.
இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இளைஞரை கொர்குத்தை 94 மணிநேரம் கழித்து மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தருணத்தில் அந்த இளைஞர் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்களிடம் அந்த இளைஞர் உணர்ச்சி பெருக்குடன், “இவ்வளவு நேரம் உங்களுக்காகத் தான் காத்திருந்தேன். யாராவது வருவார்களா என பார்த்துக்கொண்டே இருந்தேன்.
நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக எனது சிறுநீரையே குடித்து உயிரை காத்து வந்தேன். நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.
🙏🙏 Gaziantep'te Gölgeler Apartmanında 17 yaşındaki Adnan Muhammet Korkut, 94. saatte enkazdan sağ olarak kurtarıldı.
📽️ Kurtarılma anları ve sevdiklerinin mutluluğu pic.twitter.com/ERM6TMTEi8
— Ajansspor (@ajansspor) February 10, 2023