பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்புர பிரதேசத்தில் பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது அருகில் இருந்த குறித்த பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தினால் குறித்த இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.