மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார கட்டணம் தொடர்பில் கலந்துரையாடி தெளிவான தீர்மானத்திற்கு வருமாறு தேசிய சபை நேற்று (13) மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தது.
இதன் பிரகாரம் இரு தரப்பினருக்கும் இடையில் இன்று மின்சார கட்டணம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதேவேளை மின்சார கட்டணம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் நாளை (15) வழங்கப்படும் என நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, திரன் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சாகர காரியவசம், பணிமனை பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.