உள்ளூராட்சி தேர்தலுக்கு அவசியமான நிதியை வழங்குமாறு கோரி இன்று நிதியமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அவர்களுக்கு அறியப்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹோ தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் தொடர்பாக திறைசேரியின் செயலாளருடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.