இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.

Popular

More like this
Related

அனோஜன் வழக்கில் சிறப்பு சட்டத்தரணிகள் குழு பேச்சுவார்த்தை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வது...

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

ஊழல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம, இலஞ்சம்...

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒப்பற்ற ஆசிரியர்.

படைப்பாளன் அல்லாஹ்வால் மனித குலத்தை இணைவைப்பிலிருந்தும், சமூகச் சீர்கேடுகளிலிருந்தும் பாதுகாப்பதற்காகத் தான்...

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான்...