மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

Date:

நாட்டின் போக்குவரத்துத் துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்குமென, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ளும் வேகா இனோவேட்டிவ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துக்கு கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

UNDP உதவியின் கீழ் இலங்கையில் 300 முச்சக்கர வண்டிகளை மின்சார வாகனமாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு புதிய உள்ளூர் வடிவமைப்பாளர்களுக்கு அவர்களின் வடிவமைப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது, எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகள் மட்டுமின்றி, மோட்டார் சைக்கிள்கள், கார்கள், படகுகள் உள்ளிட்ட பல வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் இந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அதிக தேவையுடைய ஒரு தொழிலாக வளர்ந்து வரும் இலங்கை ரயில்வேயின் பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் சொத்துக்களை வழங்கவும் தேவையான வசதிகளை வழங்கவும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...