ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல பகுதிகளுக்குள் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை உள்நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உட்பட பலருக்கும் கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக இன்று பிற்பகல் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகிறது.
இந்நிலையிலேயே குறித்த பகுதிகளுக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.