உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாராத வகையில் உக்ரைன் சென்றார்.
கடைசி வரை அவரது பயண விபரம் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உக்ரைன் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பைடன்,
“உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான எனது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக கீவ் சென்றுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பைடனின் திடீர் பயணத்தை பாராட்டியுள்ள செலன்ஸ்கி, “ஜோசப் பைடன் கீவ்வுக்கு வருக! உங்கள் வருகை அனைத்து உக்ரைனியர்களுக்கும் உங்களின் ஆதரவின் மிக முக்கியமான சமிக்ஞையாகும்” என்றார்.