‘அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 239 வாகனங்கள் துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது’

Date:

அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண ஏழை மக்களிடம் மின் கட்டணத்தை உயர்த்தி அமைச்சர்கள் மகிழ்கிறார்கள் அந்த சுகத்தை அமைச்சர்கள் அனுபவிக்க மக்களே மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லாவிட்டாலும், இவ்வாறான வீண் செலவுகளுக்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...