முதல் அரையிறுதி சுற்று: நாளை மோதும் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள்!

Date:

8-வது T20 மகளிர் உலக கிண்ணம கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின.

இதில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீசை வென்று இருந்தது. இங்கிலாந்திடம் மட்டும் 11 ரன்னில் தோற்றது.

3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

இதன் மூலம் ‘குரூப் 2’ பிரிவில் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தகுதி பெற்றுவிட்டது.

‘குரூப் 1’ பிரிவில் இருந்து அவுஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி அரை இறுதிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.

நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. வரும் 26-ம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...